கவனம் ஈர்க்கும் பேச்சுலர் படத்தின் ப்ரோமோ வீடியோ !
By Aravind Selvam | Galatta | December 06, 2021 18:28 PM IST
இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் ஜீ வி பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் கடைசியாக வணக்கம் டா மாப்ள திரைப்படம் நேரடியாக சன் NXT தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடிப்பில் சில படங்கள் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இவர் அடுத்ததாக நடித்துள்ள பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் சில ப்ரோமோ வீடியோக்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Fun filled PROMO from #Bachelor #BlockbusterBachelor 🦋@gvprakash @Dili_AFF @AxessFilm @Sathishdiroff @SakthiFilmFctry @thenieswar @Sanlokesh @divyabarti2801 @itspooranesh @APIfilms @thinkmusicindia @DoneChannel1 @Duraikv @CtcMediaboy @decoffl @gopiprasannaa pic.twitter.com/jnpSEjNJxv
— Axess film factory (@AxessFilm) December 5, 2021
Catch the Crazy Promo of #Bachelor #BlockbusterBachelor 🦋@gvprakash @Dili_AFF @AxessFilm @Sathishdiroff @SakthiFilmFctry @thenieswar @Sanlokesh @divyabarti2801 @itspooranesh @APIfilms @thinkmusicindia @DoneChannel1 @Duraikv @CtcMediaboy @decoffl @gopiprasannaa pic.twitter.com/dCGebXoUD2
— Axess film factory (@AxessFilm) December 6, 2021
Ajith Kumar's Valimai gets a new BIG release announcement - Breaking! Check out!
17/12/2021 08:15 PM