கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பிரேம் குமார் இயக்கிய இந்த படத்தில் சிறுவயது ஜானுவாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகிஇருக்கும் கௌரி கிஷன், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

கௌரி கிஷன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பாடல் ஆல்பம் மறையாத கண்ணீர் இல்லை. தாய் - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இந்த பாடலை ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பாடலின் டீஸர் கடந்த மாதம் வெளியான போதே இணையவாசிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் இந்த பாடலை பாடியுள்ளார். மதன் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எடவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கும் விஷ்ணு எடவன் பாடல் வரிகள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் அண்ட் ஒயிட் ஸ்டுடியோஸ் இந்த பாடலை தயாரித்துள்ளது. 

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கௌரி கிஷன். கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் கௌரி கிஷன். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.