சர்ச்சை காரணமாக காட்மேன் டீஸர் நீக்கம் !
By Sakthi Priyan | Galatta | May 30, 2020 13:09 PM IST
தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில் வெப் சீரிஸுக்கு என தனி ரசிகர்கள் உண்டு. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.
இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கினார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜி, இந்த வெப் சீரிஸில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப் சீரிஸ் ஜூன் மாதம் 12-ம் தேதி Zee5 தளத்தில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகியது. அதில் இடம் பெற்றுள்ள ஆபாச காட்சிகளும், வசனங்களும் சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இதனால் டீஸர் நீக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியிலும் மாற்றம் இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Coronavirus crisis | President Donald Trump terminates US ties with WHO
30/05/2020 12:45 PM
Director Vijay and Aishwarya blessed with baby boy | Wishes pour in
30/05/2020 12:41 PM