தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.     

Geetha Govindam Fame Rashmika Mandana Tweeted About Thalapathy 63 Project

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்று பிரஸ் மீட்டின் போது தயாரிப்பாளர் தெரிவித்தார்.   

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். தற்போது நயன்தாராவை தொடர்ந்து, மேயாத மான் புகழ் நடிகை இந்துஜா இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவுகிறது.   

தற்போது இப்படம் குறித்து கீதா கோவிந்தம் புகழ் நடிகை ராஷ்மிகா, விஜய் சார் படத்தில் நான் நடிக்கிறேனா? என்று அனைவரும் என்னை கேட்டு வந்தீர்கள். இந்த தடவை அமையவில்லை. விரைவில் நடக்கக்கூடும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மேலும் முழு ஆதரவு தரும் ரசிகர்களுக்கு தனது நன்றியையும் கூறிவருகிறார் ராஷ்மிகா.