"வெட்டு குத்து இருக்கு... பாரதிராஜா சார் என்ன அடிச்சிட்டாரு!"- கருமேகங்கள் கலைகின்றன விழாவில் பேசிய கௌதம் மேனன்! வைரல் வீடியோ

கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன்,gautham menon about working with bharathiraja in karumegangal kalaiginrana | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது நடிகராகவும் தளபதி விஜயின் லியோ படம் உட்பட அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனரான இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகனாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க, யோகி பாபு, அதிதிபாலன், மம்தா மோகன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், லெனின் படத்தொகுப்பு செய்ய, கருமேகங்கள் கலைகின்றன படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மேடையில் பேசுகையில்,

"வெட்டுக்குத்து பத்தி பேசினார்கள், இந்த படத்திலும் வெட்டு குத்து இருக்கு லெனின் சாருடைய வெட்டு இருக்கு. குத்தும் இருக்கு ஏனென்றால் பாரதிராஜா சார் என்னை இதில் அடித்திருக்கிறார். ஒரு இடத்தில் அந்த காட்சி எனக்கு ரொம்ப நன்றாக ஞாபகம் இருக்கிறது ஏனென்றால் அந்த காட்சி ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தோம் அது ஏன் கஷ்டப்பட்டு எடுத்தோம் என்றால் பாரதிராஜா சார் அந்த சீனை இந்த மாதிரி எடுக்கலாம் என்று சொல்லி இருந்தார். நான் தங்கர் சாரிடம் இந்த மாதிரி எடுக்கலாம் என்று வேறொரு ஆலோசனை சொல்லியிருந்தேன்.  பிறகு தங்கர் சார் வந்து இதை இப்படித்தான் செய்ய வேண்டும். சிங்கிள் ஷாட்டில் எடுக்கலாம் என்று சொன்னார். அதில் வசனத்தை பேசி முடித்த பிறகு பாரதிராஜா சார் என்னை அடிக்க வேண்டும். எல்லாமே மிக அற்புதமாக செய்திருந்தார் பாரதிராஜா சார். ஆனால் என்னை அடிக்கும் போது மட்டும் பாதியிலேயே நிறுத்திக் கொண்டே இருந்தார். அடிச்சிருங்க சார் எப்படியும் நான் உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருப்பேன் என்றாவது ஒரு நாள் அது அன்னைக்கு நடக்கவில்லை இன்னைக்கு அடிச்சிடுங்க சார் என்று சொல்லி  கடைசி டேக்கில் என்னை ஒருவாட்டி அடித்துவிட்டார். அந்த நினைவு எனக்கு இருக்கிறது மிகவும் அழகான படம். நான் இன்னும் படம் பார்க்கவில்லை நேற்று ஷோவிற்கு நான் வரவில்லை. ஆனால் டப்பிங் பணிகளை பண்ணும் போது சில காட்சிகளை நான் ஓட்டிப் பார்த்து இருக்கிறேன் என்ன கதை எனக்கு நன்றாகத் தெரியும் அதிதி உடன் நடித்த காட்சிகள் மிக அழகாக வந்துள்ளது. அவர் ஒரு திறமையான நடிகை எனக்கு இது மிகவும்  சவாலாக இருந்தது. ஏனென்றால் நான் இதை இன்னும் ஒரு கரியராக பார்க்கவில்லை இந்த மாதிரி ஜாம்பவான்கள் மற்றும் நடிகர்களுடன் வேலை செய்யும் போது கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் பெரிதாக அமைகிறது. அதனால் தான் இந்தப் படத்தை நான் பண்ணியிருக்கிறேன் இந்த பெரிய படத்தின் ஒரு பெரிய அங்கமாக இருப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தங்கர்பச்சான் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்க் கீழ காணலாம்.