துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா படத்திற்கு இதுவரை இல்லாத பிரம்மாண்ட ஒப்பனிங்... ரிலீஸ் குறித்த அதிரடியான அறிவிப்பு! 

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா படம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ்,dulquer salmaan in king of kotha movie gets huge release | Galatta

மலையாளத் திரை உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய சாதனையாக சாதனை என சொல்லும் அளவிற்கு துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் கிங் ஆப் கொத்தா திரைப்படம் உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. மலையாள சினிமாவில் நடிகராக களமிறங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் மிக முக்கிய நடிகராக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் துல்கர் சல்மான் முதல் முறை நடித்த வெப்சிரிஸான கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக நெட்பிலிக்ஸ் வெளிவந்து ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில்  அடுத்தடுத்து வரிசையாக அட்டகாசமான படைப்புகள் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. அடுத்ததாக தனுஷின் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகும் லக்கி பாஸ்கர் எனும் படத்தில் நடிக்க இருக்கும் துல்கர் சல்மான் தொடர்ந்து ஸ்கந்தா எனும் ஒரு PAN INDIA படத்திலும் நடிக்கிறார்.

இதனிடையே துல்கர் சல்மான் நடிப்பில் அதிரடி ஆக்சன் கேங்ஸ்டர் படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கும் கிங் ஆஃப் கொத்தா படத்தை அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். தனது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் 1980களில் நடைபெறும் கதைக்களத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆப் கொத்தா படத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை ரித்திகா சிங் கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை பரிசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மானின் திரை பயணத்திலும் மலையாள திரையுலகிலும் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான ரிலீசாக கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 24) திரைக்கு வருகிறது. உலகமெங்கும் 50ற்கும் மேற்பட்ட நாடுகளில் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் ரிலீசாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமாக வெளிவரும் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிங் ஆஃப் கொத்தா படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு இதோ
 

Wayfarer Films and Zee Studios is proud to bring to you @dulQuer’s #KingOfKotha in 2500+ screens across 50+ countries making it the widest release for a Malayalam film. #KingOfKotha from tomorrow! @dulQuer @AishuL_ @actorshabeer @Prasanna_actor #AbhilashJoshiy @NimishRavipic.twitter.com/iyRHKrFZcT

— Zee Studios South (@zeestudiossouth) August 23, 2023