தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் அடுத்ததாக சிலம்பரசனுடன் இணைந்து பத்துதல திரைப்படத்தில் நடித்து வருகிறார். பத்துதல படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடல் இன்று(நவப்பர் 20) வெளியானது.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி ரங்கநாதன் தயாரித்துள்ள ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் ஷிவாத்மிகா கதாநாயகியாக நடிக்க மௌனிகா, சரவணன், சினேகன், ஜாக்குலின், மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.நடிகர் & இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அழகான கிராமத்து குடும்பத்து திரைப்படமாக தயாராகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விரைவில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடலாக சொந்தமுள்ள வாழ்க்கையில எனும் அழகான பாடல் இன்று வெளியானது. அழகான இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.