உலக அளவில் அதிகப்படியான ரசிகர்களால் ரசிக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் முக்கியமான ஒரு தொலைக்காட்சித் தொடர் பிரண்ட்ஸ். இந்த பிரண்ட்ஸ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் அத்தனை பிரபலங்களும் ஹாலிவுட் திரை உலகில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருக்கின்றனர். 

1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி தொடர் 2004 வரை ஒளிபரப்பான என்ற தொலைக்காட்சித் தொடரில் 236 எபிசோடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த தொடரில் நடித்த நடிகர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக பிரண்ட்ஸ் ரியூனியன் என்ற ஒரு நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.  

கடந்த வருடம் ஏற்பட்ட  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  இதன் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.இந்த பிரண்ட்ஸ் ரியூனியன் நிகழ்ச்சி தற்போது நேரடியாக ஓட்டிட்டு தளத்திலும் வெளியாக உள்ளது. 

ZEE5 பிரிமியம் OTT தளத்தில்  வரும் மே 27-ஆம் தேதி முதல் பிரண்ட்ஸ் ரியூனியன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதால் இந்தியாவில் உள்ள ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 25 ஆண்டுகளை கடந்து இன்றும்  மக்களால் அதிகம் ரசிக்கப்படும் பிரண்ட்ஸ் தொடரின் நட்சத்திரங்கள் அனைவரும்  மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு ஒன்றிணையும் இந்த பிரண்ட்ஸ் ரியூனியன் நிகழ்ச்சி தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.