தமிழ் சினிமா ரசிகர்களின் காதல் நாயகனாக இருந்து தனது வித்தியாசமான படங்களால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சூர்யா.இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK திரைப்படம் மே 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Fan Asks Suriya When Will he Again Act With Jyothika and Suriya Gives a Super Reply To the Fan

இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நேற்று சூர்யா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் லைவ் ஆக வந்து கலந்துரையாடினார்.ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார்.அதில் ஒரு ரசிகர் நீங்கள் எப்போது மீண்டும் உங்கள் மனைவியுடன் நடிக்க போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

Fan Asks Suriya When Will he Again Act With Jyothika and Suriya Gives a Super Reply To the Fan

அதற்கு பதிலளித்த சூர்யா கண்டிப்பாக விரைவில் ஒரு படம் பண்ணுவோம் நானும் ஜோதிகாவும் இணைந்து நடித்தால் அது ஸ்பெஷலான படமாக இருக்கவேண்டும்.சமீபத்தில் ஒரு கதையின் முதல்பாதி கேட்டேன் மிகவும் பிடித்திருந்தது அதனை முழுவதுமாக முடிக்கசொல்லியிருக்கிறேன்.எல்லாம் சரியாக நடந்தால் அந்த கதையில் விரைவில் நானும் ஜோதிகாவும் இணைந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Fan Asks Suriya When Will he Again Act With Jyothika and Suriya Gives a Super Reply To the Fan