“நான் அவர ரொம்ப Miss பண்றேன்..” மேடையில் கண்ணீர் விட்ட ஏ ஆர் முருகதாஸ் – வைரல் வீடியோ இதோ..

மேடையில் கண்ணீர் விட்ட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் - AR Murugadoss emotional speech goes viral | Galatta

சுதந்திரம் கிடைத்ததை கிராமத்திடம் இருந்து மறைத்து அவர்களை அடிமைப்படுத்தும் பிரிட்டிஷ் ஆதிக்க மனிதர்களை எதிர்த்து போராடும் கதைக்களமாக உருவான ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன் குமார் இயக்கத்தில் பீரியட் படமாக உருவான இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்க அவருடன் குக் வித் கோமாளி புகழ் மற்றும் ரிச்சர்ட் ஆண்டர்சன், ரேவதி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் சியான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு  விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனர் குறித்து உருக்கமாக பேசினார். அவர் பேசியது.

“ படம் நல்லா வந்துருக்கு.. இது எல்லாத்துக்கும் மேல பெரிய வலியை சந்தானம் சார் கொடுத்துட்டு போயிட்டாரு.. என்னால அதை ஏற்றுக் கொள்ளவே முடியல.. சர்கார், தர்பார் படத்தின் போது நேரத்தில் பணியாற்றினோம். இந்த படத்திற்கு எனக்காக கம்மி சம்பளத்தில் வேலை பார்த்தார். ஏனென்றால் பட்ஜெட் குறைவு. ஒரு ஊர்ல பொட்டல் காட்டில் ஒரு கிராமம் போட்டாரு..  எனக்கு போட்டோ அனுப்புனாரு..  நான் என்னங்க செட் இது.. எல்லா குடிசையும் ஒரே நாள்ல போட்டா மாதிரி இருக்குனு கேட்டேன்.  எனக்கு நம்பிக்கை இல்லாமல் அந்த காட்டுக்கே போனேன். இறங்குனது அந்த 24 மணி நேரத்தில் எல்லாத்தையும் மாத்திட்டாரு..  ஒவ்வொரு குடிசையும் வித்யாசமா கொடுத்து பிரமாதமா பண்ணாரு. என்னிடம் அவர் சொன்னார். இந்த படத்தை எல்லா விருது விழாவிற்கும் அனுப்புங்கள் என்று நானும் சரினு சொல்லிட்டேன். ஆனா விருது வாங்க அவர் இல்ல.. அவர் குழந்தைகளுக்காவது அவர் இருந்திருக்கலாம்” என்று கண்கலங்கினார் ஏஆர் முருகதாஸ்.

கலை இயக்குனர் சந்தானம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர். மேலும் காவிய தலைவன், இறுதி சுற்று, சர்கார், தர்பார், ஜகமே தந்திரம், மகான்   மற்றும் பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் . 50 வயதை கடந்த கலை இயக்குனர் சந்தானம் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதி திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல நிகழ்வுகள் மற்றும் 1947 படம் குறித்து  இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு இதோ..

“அக நக’ பாடல் வரிகள் Tongue twisters மாதிரி இருந்துச்சு..” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..
சினிமா

“அக நக’ பாடல் வரிகள் Tongue twisters மாதிரி இருந்துச்சு..” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“யாரையாவது டேட்டிங் செய்யலாமே?” என்ற கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில் – ரசிகர்களிடையே வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“யாரையாவது டேட்டிங் செய்யலாமே?” என்ற கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில் – ரசிகர்களிடையே வைரலாகும் பதிவு இதோ..

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம் - நடந்தது என்ன? விவரம் இதோ..
சினிமா

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம் - நடந்தது என்ன? விவரம் இதோ..