பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்த வந்த மிரட்டலான புது GLIMPSE இதோ!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் உருவாகும் விதம்,mani ratnam in ponniyin selvan 2 movie trailer making video | Galatta

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் ஆல் டைம் ரெகார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று புனைவு நாவலை தழுவி இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து அமைத்த திரைக்கதையில், ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் அவர்களின் படத்தொகுப்பில் உருவான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலான அக நக பாடல் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த நிலையில், ட்ரெய்லருக்காக மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த பிரம்மாண்ட படைப்பின் ட்ரெய்லரில் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றுவது, நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஜெயராம் ஆகியோர் டப்பிங் செய்வது என பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரின் மிரட்டலான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள அந்த வீடியோ இதோ…
 

ஆதித்த கரிகாலன் பராக்.. பராக்.!- ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மாஸான புதிய ப்ரோமோ இதோ!
சினிமா

ஆதித்த கரிகாலன் பராக்.. பராக்.!- ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மாஸான புதிய ப்ரோமோ இதோ!

ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களின் வாய்ப்புகள் குறைகிறதா?- பொன்னியின் செல்வன் 2-ல் பாடிய முன்னணி பாடகியின் பதில் இதோ!
சினிமா

ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களின் வாய்ப்புகள் குறைகிறதா?- பொன்னியின் செல்வன் 2-ல் பாடிய முன்னணி பாடகியின் பதில் இதோ!

அஜித் குமாரின் வீட்டில் சூர்யா & கார்த்தி... தந்தை மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பு! வைரல் வீடியோ
சினிமா

அஜித் குமாரின் வீட்டில் சூர்யா & கார்த்தி... தந்தை மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பு! வைரல் வீடியோ