தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களமிறங்கும் மாஸ் ஹீரோ... அதிரடி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் லியோ படத்தோடு களமிறங்கும் ராம் போத்தினேனியின் படம்,boyapatirapo movie releasing with thalapathy vijay in leo movie | Galatta

மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வருகிறது லியோ திரைப்படம். தளபதி விஜயின் திரைப்பயணத்தில் 67வது திரைப்படமாக தயாராகிய வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ச்சியாக 50 நாட்கள் நடைபெற்றது. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஆயுத பூஜை வெளியீடாக மற்றொரு மாஸ் ஹீரோவின் திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரியார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான வாரியார் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கென இரு மொழிகளில் வெளிவந்தது. இதனை அடுத்து தனது அடுத்த அதிரடி திரைப்படமாக #BOYAPATIRAPO என தற்காலிகமாக குறிப்பிடப்படும் புதிய படத்தில் ராம் போத்தினேனி நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் துளசி, சிம்ஹா, லெஜன்ட், சரைநோடு, வினைய விதாய ராமா என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் போயப்பட்டி சீனு இயக்கத்தில் கடைசியாக நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்த அகண்டா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த வரிசையில் அடுத்த அதிரடி திரைப்படமாக இயக்குனர் போயப்பட்டி சீனு இயக்கத்தில் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்க முன்னணி இசையமைப்பாளர் தமன்.S இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என PAN INDIA படமாக வெளியிடப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே இந்த முறை ஆயுத பூஜை ரேதில் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தோடு இணைந்து ராம் போத்தினேனியின் #BOYAPATIRAPO படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

VASTUNAAM! See you this October!🔥#BoyapatiRAPO pic.twitter.com/MqXVHCnSiF

— RAm POthineni (@ramsayz) March 27, 2023

'சாகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண் கலங்கியது ஏன்?'- உண்மையை உடைத்த சமந்தாவின் எமோஷனலான பேட்டி இதோ!
சினிமா

'சாகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண் கலங்கியது ஏன்?'- உண்மையை உடைத்த சமந்தாவின் எமோஷனலான பேட்டி இதோ!

ஆதித்த கரிகாலன் பராக்.. பராக்.!- ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மாஸான புதிய ப்ரோமோ இதோ!
சினிமா

ஆதித்த கரிகாலன் பராக்.. பராக்.!- ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மாஸான புதிய ப்ரோமோ இதோ!

ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களின் வாய்ப்புகள் குறைகிறதா?- பொன்னியின் செல்வன் 2-ல் பாடிய முன்னணி பாடகியின் பதில் இதோ!
சினிமா

ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களின் வாய்ப்புகள் குறைகிறதா?- பொன்னியின் செல்வன் 2-ல் பாடிய முன்னணி பாடகியின் பதில் இதோ!