தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ் குயின். மறைந்த நடிகை மற்றும் முதலமைச்சரான இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக எடுத்து வருகின்றனர். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் என்ற செய்தி பெரிதளவில் வரவேற்பை பெற்றது. 

Fabulous Update On Gautham Menons Web Series Indicating Vivek Rajagopals Role

சசிகலா ரோலில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற செய்தியும் தெரியவந்தது. நடிகர்கள் வம்சி கிருஷ்ணா, இந்திரஜித்தும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். வெப் சீரிஸுக்கு என தனி வரவேற்பு உள்ள நிலையில், கௌதம் மேனனின் இந்த படைப்பு மிகுந்த எதிர்பார்பில் உள்ளது.

Fabulous Update On Gautham Menons Web Series Indicating Vivek Rajagopals Role

இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கும் நடிகர் விவேக் ராஜ்கோபாலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டபோது, வெப் சீரிஸில் வரும் முக்கிய ஐந்து பாத்திரங்களில் நானும் இருப்பேன். தற்போதைக்கு இதுமட்டும் தான் என்னால் கூற இயலும் என்றார். விரைவில் ஸ்வாரஸ்யமான தகவலுடன் குழுவினர் வருகிறோம் என்றார்.

Fabulous Update On Gautham Menons Web Series Indicating Vivek Rajagopals Role

இயக்குனர் கௌதம்மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரியவந்தது.