தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கத்தில் நேற்று வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். 

Dubsmash Fame Mrinalinis Shocking Tweet For Her Performance In Super Delux

இந்தப் படத்தில் ஃபஹத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Dubsmash Fame Mrinalinis Shocking Tweet For Her Performance In Super Delux

படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி ட்விட்டரில், படத்தில் தான் நடித்த பாத்திரம் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் மன்னிப்புடன் பதிவு செய்துள்ளார். அடுத்து வரும் படங்களில் நிச்சயம் நன்றாக நடிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

Dubsmash Fame Mrinalinis Shocking Tweet For Her Performance In Super Delux

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மிர்னாலினியின் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு இருந்தது. தனக்கு குடுத்த பத்திரத்தை ஏற்று நடிப்பதே ஒரு கலைஞனின் வேலை, அதை சரியாக செய்திருக்கிறார் என்பது படத்தின் மகிமை அறிந்தவர்களுக்கு தெரியும்.