விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் என்ற திரைப்படம் திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.     

மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மேலும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தில் தான். பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். 

Director Vignesh Shivan Appreciates GVPrakash Sarvam Thaalamayam    

சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட ராஜிவ்மேனன் இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப காரணியை வைத்து இயக்கிருக்கிறார். இதற்க்கு முன்பு ஹேராம் மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்களில் இந்த லைவ்-சின்க் ரெகார்டிங் முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது இப்படத்தின் ஆறு பாடல்கள் கொண்ட ட்ராக்-லிஸ்ட் சமீபத்தில் வெளியானது.   

தற்போது இப்படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ராஜீவ் மேனன் மற்றும் படக்குழுவை பாராட்டியுள்ளார். பீட்டர் பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் சிறப்பாக நடித்ததாகவும். சமூக அக்கறை கொண்ட கருத்தை படம் வெளிப்படுத்தியிருக்கிறது என்றும் பதிவிட்டிருக்கிறார்.