முதல் இரவு காட்சிகளை நீக்கப்போகிறோம் - வெற்றிமாறன் !
By Sakthi Priyan | Galatta | October 23, 2018 09:29 AM IST
கடந்த வாரம் 17-ஆம் தேதி தனுஷ் தயாரிப்பில் அவரே நடித்து வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் வட சென்னை. வெற்றி பாதையில் பயணித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இப்படத்தில் இருக்கும் முதல் இரவு காட்சிகளை நீக்கப்போவதாக அறிவித்தார் வெற்றிமாறன்.
கப்பலில் அமீர்-ஆண்ட்ரியா தோன்றும் முதல் இரவு காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தி காண்பித்தது போல் உள்ளன என மீனவ சமுதாய நண்பர்கள் இயக்குனர் வெற்றிமாறனிடம் கேட்டுக்கொண்டதால், அவர்களது வேண்டுகோளிற்கிணங்க அந்த காட்சிகளை நீக்கபோவதாக அறிவித்தார்.
யார் மனதும் புண்படாமலிருக்க இதற்கான நடிவடிக்கைகளில் இறங்கியுள்ள இயக்குனர் வெற்றிமாறனது செயல் பாராட்டிற்குரியது.
First Night Scene in VADA CHENNAI - Vetri Maaran Apologies | Dhanush | TT 314