'தளபதி 68 அப்டேட் எப்போ?' ஒரே வார்த்தையில் பதிலளித்த இயக்குனர் வெங்கட் பிரபு... உற்சாகத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்!

தளபதி 68 அப்டேட் கேட்ட ரசிகருக்கு வெங்கட் பிரபு பதில்,director venkat prabhu answered to fan for thalapathy 68 update | Galatta

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு ஒற்றை வார்த்தையில் இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்திருக்கிறார். பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக தொடர்ந்து அட்டகாசமான படங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த அதிரடி படைப்பாக ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது லியோ திரைப்படம். மாஸ்டர் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் பக்கா ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே தளபதி விஜய் உடன் இணைந்து நடித்துள்ளனர். 

இந்த 2023 ஆம் ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்றாக இந்திய அளவில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிற லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜயின் திரைபயணத்திலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான ரிலீசாக லியோ படத்தை வெளியிடப்பட குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்சமயம் லியோ திரைப்படத்தின் இறுதி கட்ட மிரட்டலான VFX காட்சிகளுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. லியோ திரைப்படத்தை தொடர்ந்து திரை பயணத்தில் 68 வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் . 

அந்த வகையில் தளபதி விஜய் தற்போது தளபதி 68 திரைப்படத்தில் தற்போது கவனம் செலுத்தியிருக்கிறார். முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு கைகோர்த்துள்ளது. லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX பணிகளுக்காக தளபதி 68 படக்குழு தற்போது USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில்  நடைபெற்று வரும் தளபதி 68 திரைப்படத்தின் இந்த முதற்கட்ட பணியில் தளபதி விஜய் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை தனது விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்!!! #தளபதி68" என குறிப்பிட்டு சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் சூழலில் சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர். அப்படியாக ரசிகர் ஒருவர் "தளபதி 68 அப்டேட் அப்டேட் அப்டேட்" என தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்க அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு, "விரைவில்" என ஒரே வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த பதிலால் வெகு விரைவில் தளபதி 68 குறித்த முக்கிய அறிவிப்பு வரும் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர். 
 

Viraivil https://t.co/SHNkNqz1uj

— venkat prabhu (@vp_offl) September 14, 2023