தமிழ் சினிமாவில் புதிய நூற்றாண்டில் முதல் தடம் பதித்த இயக்குநர்களில் முதன்மையான இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் செல்வராகவன். ரசிகர்களால் ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். செல்வராகவன் இயக்கத்தில் நேற்று முன் தினம் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதை களத்தை கொண்ட படமென்பதால் 4 ட்ரைலர்களும் பார்க்கும் போதெல்லாம் எதிர்பார்ப்பை கிளப்பி கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி யுவனின் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பணக்கார தம்பதியினரான எஸ்.ஜே.சூர்யா - நந்திதாவின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பணிக்கு வருகிறார் ரெஜினா. அப்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினா மீது ஆசை வருகிறது. அதற்கான முயற்சியின் போது ரெஜினா மிகவும் கோபமடைகிறார். ஒரு கட்டத்தில் அவரை கற்பழித்துக் கொலை செய்துவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதற்குப் பிறகு என்னவாகிறது என்பதே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் திரைக்கதை.

இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க கோவிட் வாக்ஸினை எடுத்துக்கொண்டார் செல்வராகவன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

பின்னர் தனுஷ் வைத்து நானே வருவேன் படத்தை உருவாக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.