தொலைக்காட்சியில் கால்பதித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் புகழ். பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை கலகலப்பாக்குவதில் கோமாளிகளின் பங்கு அதிகம். அதனால் கோமாளிகளுக்கு என தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. குறிப்பாக புகழும் சிவாங்கியும் அண்ணன் - தங்கையாக செய்யும் அட்ராசிட்டிகள் ரசிகர்களிடம் ஏக போக வரவேற்பைப் பெற்று வருகின்றன. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த புகழ் தனது திறமையாலும், தன்னம்பிக்கையாலும் இன்று தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

கடைசியாக புதிய கார் வாங்கியது குறித்து பதிவு செய்திருந்தார் புகழ். புது காருடன் புகழ் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. இந்த காரை நடிகர் சந்தானத்திடம் காண்பித்தார். காரில் வைக்க வெள்ளி பிள்ளையாரை பரிசாக தந்தார் சந்தானம். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் புகழின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் கர்லிங் ஹேர்ஸ்டைல் இல்லாமல் புகழ் இருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் பழைய புகைப்படம் என்று விளக்கி கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

தல அஜித் நடிக்க H.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் முக்கிய ரோலில் புகழ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருவதை காண முடிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.