“என்னை அழைத்து பேசிய முதல் ஹீரோ சிம்பு தான்..” சசிகுமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

சிம்பு குறித்து இயக்குனர் சசிகுமார் பேச்சு சுவாரஸ்யமான தகவல் இதோ - Director Sasikumar about Silambarasan Tr | Galatta

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சசிகுமார். மதுரை பகுதிகளை சுற்றி நடக்கும் சம்பவங்களை நேர்த்தியான திரைப்படமாக கொடுத்து முதல் படத்திலே கவனம் பெற்றவர் இயக்குனர் சசிகுமார். முதல் படமான சுப்பிரமணியபுரம் படத்தில் தனது நடிப்பு திறமையையும் வெளிக்கொண்டு வந்திருப்பார் இயக்குனர் சசிகுமார். அதன் பின் நடிகராக பல படங்களில் நடிக்க தொடங்கினார். நாடோடிகள், குட்டி புலி, சுந்தரபாண்டியன், கிடாரி, வெற்றிவேல் போன்ற பல படங்கள் சசிகுமார் அவர்களை அட்டகாசமான நடிகராய் காட்டி அதன்படி பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவு வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து திரையரங்குகளில் 50 நாள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் அப்படத்தின் 50 வது நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இவ்விழாவில் படத்தில் நடித்த மற்றும் பணியாற்றியவர்களுக்கு 50 நாள் நினைவு சின்னம் வழங்கப்பட்டது. பின் மேடையில் பேசிய நடிகர் சசிகுமார் "ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் நான் ஒரு ஷீல்ட் வாங்குறேன். படம் பார்த்த எல்லோரும் நல்லா இருக்குனு சொன்னது சந்தோஷமா இருந்தது.‌ படத்திற்கு முறையான விளம்பரங்கள் செய்ய முடியவில்லை. வேறுவேறு காரணங்கள் இருந்ததால் விரைவில் ரிலீஸ் செய்யகூடிய சூழல். நேரமில்லாமல் விளம்பரம் செய்யவில்லை.. விளம்பரம் இல்லாமல் படம் வந்ததே தெரியல..ஆனா எனக்கு நம்பிக்கை இருந்தது.  என்னுடைய முந்தைய படங்கள் சரியாக போகமால் இருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. இதெல்லாம் தான் படத்திற்கு வரவேற்பை இரண்டாவது நாளில் வந்தது. நிறைய பேர் சொன்னார்கள் விளம்பரங்கள் செய்யுங்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. இந்த படம் இரண்டாவது வாரத்தையும் தாண்டும் என்று.. நான் உதவி இயக்குனராக பணியாற்றிய சேது படமும் இப்படிதான் மெல்ல வரவேற்பு கிடைத்தது. எனது முதல் படம் சுப்பிரமணியபுரம் அதுவும் இப்படிதான் வரவேற்பு கிடைத்தது. இதை மக்கள் அவங்க படமா எடுத்துட்டு போயிட்டாங்க.. படம் வரவேற்பை பெறும் என்று நம்பிக்கை இருந்தது‌.” என்றார் நடிகர் சசிகுமார்.

பின் தொடர்ந்து, “சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு தொலைபேசியில் அழைத்து, வாழ்த்தினார். அந்த சந்தோஷம் நாங்கள் எங்களுக்குள்ளே வைத்திருந்தோம்.  அதன்பின் சிம்பு பேசுனது, எனது முதல் படம் சுப்பிரமணியபுரம் பண்ணும்போது என்னை அழைத்து பேசிய முதல் ஹுரோ சிம்பு தான். நிறைய பேர் எனக்கு அழைத்து பேசினார்கள்." என்றார்.

நடிகர் சசிகுமார் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப்  முதன்மை கதாபாத்திரமாக வைத்து பீரியட் படம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் இருகின்றார். விரைவில் இயக்குனராக சசிகுமார் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

சர்வதேச மேடையில் மாஸ் காட்டிய நடிகை ஷாமிலி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.. விவரம் உள்ளே
சினிமா

சர்வதேச மேடையில் மாஸ் காட்டிய நடிகை ஷாமிலி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.. விவரம் உள்ளே

“ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை..” மேடையை அதிர வைத்த வெற்றிமாறனின் பேச்சு – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை..” மேடையை அதிர வைத்த வெற்றிமாறனின் பேச்சு – வைரலாகும் வீடியோ இதோ..

“அவருக்கு இதை செஞ்சா தான் ஆத்மா சாந்தி அடையும்” மயில்சாமி மறைவு குறித்து ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு – முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

“அவருக்கு இதை செஞ்சா தான் ஆத்மா சாந்தி அடையும்” மயில்சாமி மறைவு குறித்து ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு – முழு நேர்காணல் உள்ளே..