மேடையை கானா பாடலினால் அதிர வைத்த ரசிகர்.. சினிமாவில் வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்.. – Exclusive Interview இதோ..

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ் வைரலாகும் வீடியோ இதோ - Raghava Lawrence Surprise his fans | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி வெளியான திரைப்படம் ருத்ரன். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்து இயக்கிய இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து சரத் குமார், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ரன் திரைப்படம் வெளியாகி இன்று உலாகளவில் வசூல் அடிப்படையிலும் விமர்சன அடிப்படையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் முன்னிலையில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு பிரிவாக ராகவா லாரன்ஸ் பிறந்து வளர்ந்த இடமான வடசென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த அவரது ரசிகர்களும் பாடகர்களுமான ஜூனியர் நித்யா குழுவினர் அட்டகாசமான கானா பாடலை பாடி அரங்கத்தை அதிர வைத்தனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் ராகவா லாரன்ஸ் சிறப்பு பாடல் நடந்தேறியது..

பின் பேசிய ராகவா லாரன்ஸ் அவர்கள், "கானா பாடல் என்றால் எனக்கு கொஞ்சம் மனதிற்கு நெருக்கம்.‌ காரணம் பிறந்த ஏரியா, வளர்ந்த இடம், கேட்ட சத்தம். நான் முதல் முறையா ஆடுனதே சாவுக்கு தான் ஆடிருக்கோம். ரத்தத்துக்குள்ளே அது இருக்கு.. அதனால் கானா ரொம்ப பிடிக்கும்.கானாவில் அந்த வார்த்தைகளாம் ரொம்ப அழகா இருக்கும். எவ்வளவு என் மேல் அன்பு இருந்தால் இது போன்ற வார்த்தைகள் வரும்‌ அதற்காக நன்றி பா" என்று பாடகர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். மேலும் தொடர்ந்து, "நீங்க நல்ல பாடல் எதாவது இருந்தா சொல்லுங்க" என்றார். உடனே பாடகர் "நிறைய இருக்கு னா நீங்க வாய்ப்பு கொடுங்க திறமையை நாங்க காட்றோம்." என்றார். அதற்கு ராகவா லாரன்ஸ் "கண்டிப்பா வாய்ப்பு தரேன். நான் போகும் போது உங்க தொலைபேசி எண்ணை வாங்கிக்குறேன்" என்றார்.  பின் தான் வளர்த்த குழந்தைகள் தான் படிக்க வைத்த குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையில் இருப்பதை ராகவா லாரன்ஸ் சந்தித்து மேடையில் நெகிழ்ந்தார்.

மேலும் ராகவா லாரான்ஸ் பகிர்ந்து கொண்ட அட்டகாசமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ...

சர்வதேச மேடையில் மாஸ் காட்டிய நடிகை ஷாமிலி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.. விவரம் உள்ளே
சினிமா

சர்வதேச மேடையில் மாஸ் காட்டிய நடிகை ஷாமிலி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.. விவரம் உள்ளே

“ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை..” மேடையை அதிர வைத்த வெற்றிமாறனின் பேச்சு – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை..” மேடையை அதிர வைத்த வெற்றிமாறனின் பேச்சு – வைரலாகும் வீடியோ இதோ..

“அவருக்கு இதை செஞ்சா தான் ஆத்மா சாந்தி அடையும்” மயில்சாமி மறைவு குறித்து ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு – முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

“அவருக்கு இதை செஞ்சா தான் ஆத்மா சாந்தி அடையும்” மயில்சாமி மறைவு குறித்து ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு – முழு நேர்காணல் உள்ளே..