சர்வதேச மேடையில் மாஸ் காட்டிய நடிகை ஷாமிலி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.. விவரம் உள்ளே

ஓவியராக மாறிய ஷாமிலி விவரம் உள்ளே - Actress shamlee turn as paint artist | Galatta

தமிழ் திரைத்துறையில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் ஷாமிலி, நடிகை ஷாலினியின் தங்கையான இவர் ராஜ நடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்த இவர் மணிரத்தினம் படமான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரம் செய்து குழந்தையாக நடித்து மிகப்பெரிய அளவு பேசப்பட்டார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாமிலி ‘ஒய்’ என்ற தெலுங்கு திரைபடத்தில் சித்தார்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். பின்  மலையாளத்தில் வல்லீம் தெட்டி புலீம் தெட்டி’ என்ற படத்திலும்  தமிழில் ‘வீர சிவாஜி’ படைத்திலும் கதாநாயகியாக நடித்தார். குழந்தை நட்சதிரமாக திரையுலகை கவர்ந்த ஷாமிலி வளர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இருந்தாலும் இவருக்கென்ற தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் சிறந்து விளங்கிய ஷாமிலி ஓவியம் வரைவதிலும் கைதேர்ந்தவராக இருந்து வருகிறார். அதன் படி பிரபல ஓவியர் ஏவி இளங்கோவன் அவரிடம் முறைப்படி ஓவிய நுணுக்கங்களை கற்று வந்தார். ஓவிய துறையில் நாட்டம் அதிகமாக அதிலே தனது முழு கவனம் செலுத்தி ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.

அதன்படி அவரது சிறந்த ஓவிய படைப்புகள் முன்னதாக பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது அதில் சிறந்த இடமாக சமீபத்தில் துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் தனது ஓவியங்களை பார்வையாளர்களுக்கு காட்சிக்கு வைத்திருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர். இதில் ஷாமிலி அவரது ஓவியங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் மனதை வென்ற நடிகை ஷாமிலி தற்போது கலை வடிவங்களில் தனது திறமையை நிருபித்து சர்வதேச மேடைகளில் நிற்பது ரசிகர்கள் பலரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதனையடுத்து அவரது வண்ணமயமான தனித்துவமான ஓவியங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


director vetri maaran about international recognition for south indian movies

“இப்படிதான் அந்த Blue tick போச்சு..” பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் திரிஷா, ஜெயம் ரவி பகிர்ந்த தகவல் – விவரம் இதோ..
சினிமா

“இப்படிதான் அந்த Blue tick போச்சு..” பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் திரிஷா, ஜெயம் ரவி பகிர்ந்த தகவல் – விவரம் இதோ..

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மாஸ் ஹீரோவிற்கு கதாநாயகியாகும் பிரியங்கா மோகன் – உற்சாகத்தில் ரசிகர்கள். அட்டகாசமான அறிவிப்பு இதோ..
சினிமா

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மாஸ் ஹீரோவிற்கு கதாநாயகியாகும் பிரியங்கா மோகன் – உற்சாகத்தில் ரசிகர்கள். அட்டகாசமான அறிவிப்பு இதோ..

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ பட வெற்றியை வித்யாசமாக கொண்டாடிய படக்குழு.. – குவியும் வாழ்த்துகள்.. விவரம் உள்ளே..
சினிமா

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ பட வெற்றியை வித்யாசமாக கொண்டாடிய படக்குழு.. – குவியும் வாழ்த்துகள்.. விவரம் உள்ளே..