“ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை..” மேடையை அதிர வைத்த வெற்றிமாறனின் பேச்சு – வைரலாகும் வீடியோ இதோ..

தென்னிந்திய திரைப்படங்கள் குறித்து இயியாக்குனர் வெற்றிமாறன் விவரம் இதோ.. - Vetrimaaran about south indian movies recognition | Galatta

அட்டகாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியான திரைப்படங்களாக கொடுத்து அனைத்து தரப்பு மக்களையும் கவரும் அளவு படங்களை கொடுக்கும் இயக்குனர் வெற்றி மாறன். விருதுகள் ஒருபுறம் வசூல் ஒருபுறம் என நேர்த்தியான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து இன்று வரை வெற்றியை ருசித்து இந்திய அளவு கவனம் பெற்று வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படங்களாக இன்றும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டு தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், மணிரத்தினம், பாசில் ஜோசப் ரிஷப் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் உதயநிதி ஸ்டாலின், மஞ்சு வாரியர், சுஹாசினி மணிரத்தினம். ஆர் கே செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இதில் ஒரு அமர்வாக  கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பான் இந்திய திரைப்படங்கள் குறித்தும் உலக நாடுகளில் விருது பெறுவது குறித்தும் பேசினார். அதில் பேசியது,

“எல்லா ஓடிடி தளங்களிலும் இருந்து எல்லாவிதமான படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். இதன்மூலம் ஒரு எளிய மனிதனும் வெவ்வேறு விதமான சினிமாவை பார்த்து அதை பற்றி புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை எளிமையாகவும் வசதியாகவும் புரிந்து கொள்ள ஒரு இடம் கிடைத்தது. கொரோனா தொற்றுக்கு பிறகு திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் மாற ஆரம்பித்துள்ளது

பான் இந்திய சினிமா என்று சொல்லப்படும் இந்திய திரைப்படங்கள் இந்தியாவை தாண்டி உள்ள மக்களை கவர்வதற்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் என்று பேசுகிறோம். அதற்கு முன்பு தேசிய அளவு கவனம் பெற்ற படங்கள் யாரும் அவங்க மண்ணுக்கு வெளிய இருக்கவங்கள குறிக்கோளாக வைத்தும் அவர்களின் மனநிலையை மாற்றுவதர்காகவும் படங்கள் பண்ணவில்லை.

கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா போன்ற படங்கள் பான் இந்தியா அளவில் வெற்றிபெற்றதற்கு காரணம் அவை அனைத்துமே மண் தாண்டி இருக்கும் மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள்,  கலாச்சாரம் நடிகர்கள், ஆடைகள் என எல்லாம் பொதுவான முறையில் எடுக்கப்பட்ட படம். அதன்மூலம் பரவலான ரசிகர்களை கவர்வதற்காக உள்ளது. அதனால் அவை உலகளவில் பேசப்பட்டது.

திரைப்படங்கள் ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை. மெயின்ஸ்டிரீம் சினிமா பண்ணி ஆஸ்கர் வாங்குறது தான் முக்கியம். நம்ம மக்களுக்கான படம், நம்ம கொண்டாடுற படத்தை, ஆஸ்கர் வரை கொண்டு சென்று அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அதனை தான் நான் ஒரு புரட்சியாக பார்க்கிறேன்.நான் ஆஸ்கர் விருது வாங்கிய ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படம் பார்த்தேன் எனக்கு ரொம்ப புடித்திருந்தது. அதில் காட்டப்பட்டுள்ள கதை உணர்வுகள் நெருக்கமாக இருந்தது ரொம்ப அருமையாக இருந்தது. இதுபோன்ற மெயின்ஸ்ட்ரீம் படங்கள் அரசியல் பேசும் படங்கள் எல்லைகளை கடக்க வேண்டும்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை தென்னிந்திய படங்கள் ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாம் நம்முடைய கதைகளை, நம்ம மக்களுக்கான கதைகளை சொல்வதால் தான் அந்த தாக்கம் இருக்கிறது. மாற்ற திரையிலகினரால் அதை செய்யமுடியவில்லை காரணம் அவர்கள் அனைவரையும் குறிக்கோளாக எண்ணி படங்கள் தயாரிக்கின்றனர். நாம நம்முடைய அடையாளங்களோட, நம்முடைய தனித்துவங்களோட, நம்முடைய பெருமைகளோட படங்கள் பண்றது தான் நம்முடைய இந்த வளர்ச்சிக்கு காரணம். இதே நிலை, கலாசாரம் தொடரும் என நம்புகிறேன்.” என்றார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது வெற்றிமாறன் பேசிய வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

 

 

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மாஸ் ஹீரோவிற்கு கதாநாயகியாகும் பிரியங்கா மோகன் – உற்சாகத்தில் ரசிகர்கள். அட்டகாசமான அறிவிப்பு இதோ..
சினிமா

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மாஸ் ஹீரோவிற்கு கதாநாயகியாகும் பிரியங்கா மோகன் – உற்சாகத்தில் ரசிகர்கள். அட்டகாசமான அறிவிப்பு இதோ..

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ பட வெற்றியை வித்யாசமாக கொண்டாடிய படக்குழு.. – குவியும் வாழ்த்துகள்.. விவரம் உள்ளே..
சினிமா

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ பட வெற்றியை வித்யாசமாக கொண்டாடிய படக்குழு.. – குவியும் வாழ்த்துகள்.. விவரம் உள்ளே..

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் நண்பன் பட நடிகை இலியானா.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் நண்பன் பட நடிகை இலியானா.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள் – வைரலாகும் பதிவு இதோ..