ராம் மற்றும் ஜானு பெயரில் FLAMES போட்டு பார்த்த இயக்குனர் ! விவரம் உள்ளே
By Sakthi Priyan | Galatta | June 05, 2019 17:00 PM IST
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100-வது நாளை எட்டியுள்ளது. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96.
இப்படத்தில் நடித்த அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள். மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்தது.
தெலுங்கில் ரீமேக்காகும் இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். நடிகை சமந்தா நடிக்கவிருக்கும் காட்சிகள் சில நாட்களில் துவங்கவுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு பாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்கிறார். தமிழில் த்ரிஷாவின் சிறு வயது ரோலிலும் கௌரி கிஷன் தான் நடித்திருந்தார் என்பது நாம் அறிந்தவையே.
தற்போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பிரேம்குமார் FLAMES விளையாடும் விடியோவை முகநூலில் பகிர்ந்துள்ளார். ராம் மற்றும் ஜானு பெயரை எழுதி FLAMES போட்டு பார்த்தவருக்கு L, A கிடைத்தது. L என்றால் காதல், A என்றால் அன்பு என்று அர்த்தம்.