“நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா?” பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழுவினரை விளாசிய நீதிமன்றம்..

ஆதிபுருஷ் படக்குழுவினரை விளாசிய நீதிமன்றம் விவரம் உள்ளே - Allahabad high court notice to prabhas adipurush film crew | Galatta

இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகன் பிரபாஸின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயணம் இதிகாசத்தில் ஒரு பகுதியை தழுவி வெளியான இப்படத்தில் இராமணாக பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் இவருடன் சீதா தேவியாக கீர்த்தி சனொன் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர் T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர் மேலும் ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

நாடு முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஜூன் மாதம் இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படாக 3D ல் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் 10 நாட்களில் உலகமெங்கும் ரூ 450 கோடி வசூல் செய்து கவனம் பெற்று வருகிறது.  வசூல் அடிப்படையில் வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனம் மட்டுமே கிடைத்து வருகிறது.. மேலும் சிலர் இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும் தவாறாக காட்சி படுத்துவதாக சர்ச்சையும் எழுந்தது.

அதை தொடர்ந்து முன்னதாக திரைக்கதை, வசனம் ஆகியவை இந்துக்களின் மத உணர்வையும் சனாதன தர்மத்தையும் புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும் ராமன் மற்றும் ராவணன் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வரும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளன என்றும்  வசனங்களும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிட்டு  ஆதிபுருஷ் படத்தை தடைவிதிக்கக்கோரி அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆதிபுருஷ் ஆதிபுருஷ் பட வசனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிபுருஷ் படக்குழுவினரையும் தணிக்கை குழுவினரையும் சரமாரி கேள்விகளால் விளாசியுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில், “ஆதிபுருஷ் படத்தின் வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாட்டு மக்களை அறிவில்லாதாவர் என்று நினைத்தீர்களா? படம் பார்த்து நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் இருந்தது ஆச்சர்யம்.

படத்தில் அனுமன், சீதாவின் முக்கியத்துவம் இல்லாமல் இருந்துள்ளனர். சில காட்சிகளை படத்தில் நீக்கியிருக்க வேண்டும். மேலும் சில காட்சிகள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க கூடியவை. இது போன்ற சிக்கல்களுடன் படத்தை பார்ப்பது சிரமம். படத்தை முறையாக தணிக்கை செய்ய தணிக்கை குழு தவறியது ஏன்? மேலும் விசாரணையின் போது ஆதிபுருஷ் பட தயாரிப்பாளர், இயக்குனர் ஏன் ஆஜராக வில்லை?" என்று சரமாரி கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு சம்பத்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரபாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியம்மா முதல் ரெனே வரை.. நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

மாரியம்மா முதல் ரெனே வரை.. நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..

இங்கிலாந்தில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு கவுரவம்.. – குவியும் வாழ்த்துகள்..!
சினிமா

இங்கிலாந்தில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு கவுரவம்.. – குவியும் வாழ்த்துகள்..!

“எனக்கு பட வாய்ப்புகளே வரலையா?” வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த துஷாரா விஜயன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive interview இதோ..
சினிமா

“எனக்கு பட வாய்ப்புகளே வரலையா?” வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த துஷாரா விஜயன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive interview இதோ..