26 வருட கொண்டாட்டத்தில் சூர்யவம்சம் திரைப்படம்.. ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ட்ரீட்..!

26 வருட சூர்யவம்சம் படம் குறித்து சரத்குமார் கருத்து வைரல் பதிவு உள்ளே - suriyavamsam completes 26 years tweet goes viral | Galatta

கூட்டம் கூட்டமாய் குடும்பங்களுடன் வண்டி கட்டி சென்று பார்த்த திரைப்படம் என்று தமிழ் ரசிகர்களுக்கு சட்டென நினைவில் வரும் திரைப்படம் சூர்யவம்சம். கடந்த 1997 ஜூன் 27 ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் இயக்குனர் விக்ரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூர்யவம்சம். குடும்பங்களுக்குள் நிகழும் சர்ச்சை சிக்கல்கள் அதில் நிகழும் பாச போராட்டம் என குடும்பங்களுக்கே உரிய மசாலாக்களை கச்சிதமாக கொடுத்து வெளியான திரைப்படம் சூர்யவம்சம். இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க இவருக்கு ஜோடியாக ராதிகா சரத்குமார் மற்றும் தேவயானி நடித்துள்ளார். மேலும் படத்தில் பிரியா ராமன், மணிவண்ணன், ஆனந்த் ராஜ், சுந்தர் ராஜன், நிழல்கள் ரவி  உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

கூட்டு குடும்பத்தில் மற்ற மகன்களுக்கு கிடைக்கும் மரியாதையும் உரிமையும் தன் தந்தையிடம் இருந்து கிடைக்காமல் எங்கும் கதாநயாகன் தன் தந்தை பேச்சை மீறி காதல் திருமணம் செய்து கொள்ள பின் தந்தை பெருமை படும் அளவு அந்த ஊரில் தொழிலதிபராக வளர்ந்து வரும் கதையாக சூர்யவம்சம் உள்ளது. இப்படத்தில் தந்தையாகவும் மகனாகவும் சரத்குமார் நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்தி இரு பரிமாணங்களில் அசத்தியிருப்பார். அம்மாவாக ராதிகா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் கதையின் முக்கியத்துவத்தை கொண்டு இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தேவயானி முதல் பாதியில் புத்துசாலி மனைவியாகவும் இரண்டாம் பாதியில் கடமையான ஆட்சியராகவும் நடித்து கவனம் ஈர்த்திருப்பார். மணிவண்ணன், சுந்தராஜன், ரமேஷ் கண்ணா காமெடி டச் படத்திற்கு பிளஸ்.

சக்திவேல் டிராவல்ஸ், இட்லி உப்மா, பாயசம் சாப்பிடுங்க பிரண்ட்ஸ் என்று இன்றும் படத்தின் முக்கிய காட்சிகள் ரசிகர்களின் மனதை கவர்ந்தவைகளாக உள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருபார். படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசையும் பாடல்களும் தான். குறிப்பாக படத்தில் வரும் ரோசாபூ, நட்சத்திர ஜன்னலில் பாடல்கள் தமிழ் சினிமாவில் டிரேட் மார்க் ஹிட்.  ரசிகர்களின் ஆதரவை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து சரத் குமார் திரைப்பயணத்தில் மைல்கல்லாக சூர்யவம்சம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சூர்யவம்சம் திரைப்படம் ரிலீஸாகி தற்போது 26 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் நாயகனும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகருமான சரத் குமார் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில்,

“கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!  விரைவில் சூர்யவம்சம் - 2!...” என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியையும் சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தற்போது அந்த பதிவினை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என… pic.twitter.com/21WTB8X9Gz

— R Sarath Kumar (@realsarathkumar) June 27, 2023

இங்கிலாந்தில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு கவுரவம்.. – குவியும் வாழ்த்துகள்..!
சினிமா

இங்கிலாந்தில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு கவுரவம்.. – குவியும் வாழ்த்துகள்..!

“எனக்கு பட வாய்ப்புகளே வரலையா?” வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த துஷாரா விஜயன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive interview இதோ..
சினிமா

“எனக்கு பட வாய்ப்புகளே வரலையா?” வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த துஷாரா விஜயன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive interview இதோ..

மாஸ் ஹீரோவாகவும் கிளாஸ் நடிகராகவும் அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!  31வது ஆண்டு விழாவில் ‘அண்ணாமலை’ – சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மாஸ் ஹீரோவாகவும் கிளாஸ் நடிகராகவும் அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! 31வது ஆண்டு விழாவில் ‘அண்ணாமலை’ – சிறப்பு கட்டுரை இதோ..