பேட்ட விஸ்வாசம் கொண்டாட்டத்தை தொடர்ந்து வர்மா !
By Sakthi Priyan | Galatta | January 01, 2019 11:42 AM IST
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் படம் 'வர்மா'. இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது.
இந்த படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிகைகள் ரைசா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். வர்மா படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை சக்திவேலன் வாங்கியுள்ளார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் சினிமா விரும்பிகள்.
தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், வர்மா படத்தின் ட்ரைலர் வரும் ஜனவரி 9-தேதி வெளியாகவிருக்கிறது. இதனால் விஸ்வாசம் மற்றும் பேட்ட ட்ரைலர் கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்களுக்கு வர்மா ட்ரைலர் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.