ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ,ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சர்வம் தாள மயம்.ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது இந்த படம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகிவிட்டன.அபர்ணா பாலமுரளி,நெடுமுடி வேணு,வினீத்,திவ்யதர்ஷினி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் இருந்து முக்கியமான பாடலான டிங்கு டாங்கு பாடல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.