சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமான திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில்  வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.இந்த படத்தை கிரீசையா இயக்கியுள்ளார்.இந்த படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரசிகர்களிடம் விமர்சகர்களிடமும் இந்த படத்தில் துருவின் நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டது.குறுகிய காலகட்டத்தில் பெண்களின் கனவுகண்ணனாகவும் உருவெடுத்துள்ளார்.இந்த படத்தை முதலில் இயக்குனர் பாலா இயக்கியிருந்தார்.வர்மா என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படம் ,ரிலீசாகும் கட்டத்திற்கு வந்து பின்னர் கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.

ஆதித்ய வர்மா படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும்,தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா இந்த படத்தை எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தனர்.இந்த படம் விரைவில் OTT தலத்தில் வெளியாகும் என்ற செய்தியும் பல மாதங்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் simply south என்ற ஆப் மூலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் பாலா வெர்ஷனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.