தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் மாறன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தனுஷ் தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.செல்வராகவன் இந்த படத்தினை இயக்குகிறார்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக செல்வராகவன் ஒரு புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளார்.இந்த அப்டேட்டால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.