RRR படத்தின் பெரிய வரவேற்பு குறித்து ஜூனியர் NTR நெகிழ்ச்சி...!
By Aravind Selvam | Galatta | March 25, 2022 19:08 PM IST

தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.இருவருக்கும் இருபெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்து வருகின்றனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்கியுள்ளார்.இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகவுள்ளது.ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.
இந்த படத்தின் தமிழ்நாடு தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.மிக பிரம்மாண்டமாக இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜூனியர் என் டி ஆர் தனது த்விட்டேர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
Thank You, each and every one, for your unwavering love.
— Jr NTR (@tarak9999) March 25, 2022
Your love, admiration and support is what keeps me going...
Enjoy the visual spectacle that is #RRRMovie.