வெங்கட் பிரபுவின் மிரட்டலான போலீஸ் படம்... அதிரடி அறிவிப்போடு வந்த மாஸான வீடியோ இதோ!

வெங்கட் பிரபுவின் கஸ்டடி பட பீசன் அறிவிப்பு வீடியோ,venkat prabhu naga chaitanya in custody movie teaser tease video | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வெங்கட் பிரபு  தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றார். தொடர்ந்து தனது அடுத்த படைப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி திரில்லர் படமாக வெளிவந்த சரோஜா திரைப்படமும் ஹிட்டடிக்க, அடுத்து வெளிவந்த கோவா திரைப்படமும் பக்கா காமெடி என்டர்டெய்னர் படமாக பெரும் வரவேற்பை பெற்று ஹாட்ரிக் ஹிட் அடித்தது. தொடர் வெற்றிகளாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் எந்த கவலையும் இன்றி திரையரங்கில் கொண்டாடும் வகையிலான படங்களை கொடுப்பதாலும் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்தார் வெங்கட் பிரபு.

அப்படி இணைந்த அஜித்குமார் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் அஜித் குமாரின் 50வது திரைப்படம் என்பதை தாண்டி அஜித்குமாரின் திரை பயணத்திலேயே குறிப்பிடப்படும் திரைப்படமாகவும் அமைந்தது என்று சொல்லலாம். ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுத்த மங்காத்தா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் வேட்டை நடத்தியது. அடுத்தடுத்து கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 ||, முதல் முறை நடிகர் சிலம்பரசன்.TR உடன் மாநாடு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே டெலிகாஸ்ட் என்னும் வெப்சீரிஸையும், குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் லோகம் எனும் எபிசோடையும் இயக்கிய வெங்கட் பிரபு, கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்டிம் ஆந்த்ராலஜி வெப் சீரீஸில் கன்ஃபசன் எனும் எபிசோடையும் இயக்கியிருந்தார்.

இந்த வரிசையில் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக தயாராகும் திரைப்படம் கஸ்டடி. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கஸ்டடி படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.  

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கஸ்டடி திரைப்படத்தின் டீசர் வருகிற மார்ச் 16ஆம் தேதி மாலை 4:51 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கும் வகையில் டீசரின் முன்னோட்டமாக டீஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் மாசான அந்த வீடியோ இதோ…
 

AK62 - உலக சுற்றுப்பயணத்திற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

AK62 - உலக சுற்றுப்பயணத்திற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

'யார் இந்த சர்க்கிள்?'- உச்சகட்ட கோபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்... காரணம் இது தான்!
சினிமா

'யார் இந்த சர்க்கிள்?'- உச்சகட்ட கோபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்... காரணம் இது தான்!

ஆஸ்காரை வென்று வரலாற்று சாதனை படைத்த RRR... 95வது அகாடமி விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்!
சினிமா

ஆஸ்காரை வென்று வரலாற்று சாதனை படைத்த RRR... 95வது அகாடமி விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்!