இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். 

நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே வெளிவந்த ரவுடி பேபி பாடல் சக்கை போடு போட்டு வருகிறது.

மாரி 2 படம் prequel என பேசப்பட்டு வருகிறது. தற்போது வெளியான ட்ரைலர் மூலம் தெளிவாகினர் ரசிகர்கள். 

தல அஜித் நடிப்பில் கடந்த 2012-ல் வெளிவந்த பில்லா 2 படத்திலும் இதே போல் தான் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் மாரி 2 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.