மகேஷ் பாபு பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர் !
By Sakthi Priyan | Galatta | May 30, 2020 13:55 PM IST
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோக்களைப் பதிவு செய்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில், தெலுங்கு நட்சத்திரம் மகேஷ் பாபு நடித்த சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் இடம் பெற்ற மைண்ட் ப்ளாக் பாடலுக்கு நடனமாடி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். மகேஷ் பாபு மற்றும் ராஷ்மிகாவின் அசத்தலான நடனத்தில் வெளியான இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
அந்த பதிவில் 50 முறை முயற்சி எடுத்ததாக வார்னர் கூறியுள்ளார். தன் மனைவியுடன் கடைசியாக ஜூனியர் NTR பிறந்தநாளுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார்.
Coronavirus crisis | President Donald Trump terminates US ties with WHO
30/05/2020 12:45 PM
Director Vijay and Aishwarya blessed with baby boy | Wishes pour in
30/05/2020 12:41 PM