கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

David Warner Dancing For Dhanush Song

அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோக்களைப் பதிவு செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடலை கையில் எடுத்துள்ளார். 

David Warner Dancing For Dhanush Song

கடந்த 2012-ம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 3. தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலமாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற கொலவெறி பாடல் உலகம் முழுவதும் வைரலானது. தனுஷ் எழுதி பாடிய இந்த பாடல் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது.