தமிழில் உள்ள பிரபல நடன இயக்குனர்களில் ஒருவர் தினேஷ்.2011-ல் வெளியான ஆடுகளம் படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கியுள்ளார்.இதனை அடுத்து தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார்.அவ்வப்போது தான் Choreograph செய்யும் படங்களில் வந்து செல்வார்.

Dance Master Dinesh Next Film As Hero After Oru Kuppai Kathai Revealed Details Inside

2018-ல் இவர் ஹீரோவாக நடித்து வெளியான படம் ஒரு குப்பை கதை.மனிஷா யாதவ் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தினேஷின் நடிப்பையும் பலரும் பாராட்டினார்.தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Dance Master Dinesh Next Film As Hero After Oru Kuppai Kathai Revealed Details Inside

இவர் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்திற்கு நாயே பேயே என்று பெயரிட்டுள்ளனர் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் பூஜை மே 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது எனவே அன்று இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dance Master Dinesh Next Film As Hero After Oru Kuppai Kathai Revealed Details Inside