2018-ல் உலக BoxOffice-ல் சக்கை போடு போட்ட திரைப்படம் Avengers Infinity War. Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் வசூலை அள்ளி குவித்தது.

Crucial Scene From Much Awaited Avengers Endgame Leaked Online Fans Disappointed

Marvel Superhero படங்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழில் நல்ல வரவேற்பு கிடைப்பதை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம்,பிரபல இயக்குனரான A.R.முருகதாஸை Avengers EndGame பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது.அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் Marvel Anthem வெளியிடப்பட்டுள்ளது.அதோடு விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா இருவரும் தமிழ் Version-ல் டப்பிங் கொடுத்துள்ளனர்.

Crucial Scene From Much Awaited Avengers Endgame Leaked Online Fans Disappointed

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து தற்போது சில காட்சிகள் லீக்காகி உள்ளன.இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இது படக்குழுவினர் மற்றும் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படத்தில் இருந்து காட்சிகள் கசிந்தது குறித்து படக்குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Crucial Scene From Much Awaited Avengers Endgame Leaked Online Fans Disappointed