விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பபங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தும் அசத்தியுள்ளார் பவித்ரா.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

தமிழில் ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் ஒரு படம்,கதிர் ஹீரோவாக நடிக்கும் படம் என சில படங்களில் நடித்து வருகிறார் பவித்ரா.ஏஜி எஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதிஷ் ஹீரோவாகி நடிக்கிறார்.கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அஜீஸ் அசோக் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை பவித்ரா பகிர்ந்துள்ளார்.இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளதாக பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.படத்தின் ரிலீஸ் வேலைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cook with comali pavithra lakshmi starts dubbing for ags entertainments movie