பிக்பாஸ் தொடரில் பங்கேற்று தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் குறுகிய காலத்தில் இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.இளைஞர்களின் கனவுக்கன்னியாக வெகுவிரைவில் உருவெடுத்த இவர் , தற்போது தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஸ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியை கலக்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஸ்வின்.

இந்த இருவரும் இணைந்து தற்போது விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த ரொமான்டிக் விளம்பர படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by I n d i a n c i n e m a🌸🇸🇬 (@officiallyciinema)