களைகட்டிய சன் டிவி சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | January 26, 2021 19:07 PM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்
சன் டிவியில் பல சூப்பர்ஹிட் ஷோக்களையும் , பல விருது விழாக்களையும் தொகுத்து வழங்கி அசத்தியிருந்தார் நக்ஷத்திரா.இவற்றை தவிர சேட்டை,வாயை மூடி பேசவும்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இதை தவிர As Im Suffering From Kadhal என்ற வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார்.
2018 முதல் 2020 வரை சன் டிவியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரின் நாயகியாக நடித்திருந்தார்.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் நக்ஷத்திரா.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் நடித்திருந்தார் இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.
தனக்கு வரப்போகும் வருங்கால துணையை தேர்ந்தேடுத்துள்ளதாக சில நாட்களுக்கு முன் ராகவ் என்பவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் நக்ஷத்திரா.ராகவ்-நக்ஷத்திரா இருவருக்கும் நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.இது குறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
![AELAY - Official Trailer [Tamil] | Samuthirakani | Halitha Shameem | In Theatres February 12, 2021- AELAY - Official Trailer [Tamil] | Samuthirakani | Halitha Shameem | In Theatres February 12, 2021-](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/Samuthirakani AELAY Official Trailer Halitha Shameem Sillu Karuppatti_1611671781.jpg)







