சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தற்போது விஸ்வாசம் படத்தின் மூன்றாவது லிரிக் வீடியோ இன்று 7 மணியளவில் வெளியாகவிருக்கிறது. KannaanaKanney என பெயரிடப்பட்டுள்ள இப்பாடல், தல ரசிகியர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. லஹரி மியூசிக் நிறுவனத்தில் இப்பாடல் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்.