அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Release Date Announced Clashes With Prabhas Mega Budget Saaho

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக கடைசியாக வெளியான போஸ்டர் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

Comali Release Date Announced Clashes With Prabhas Mega Budget Saaho

இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதே நாளில் பிரபாஸின் சாஹோ படமும் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

Comali Release Date Announced Clashes With Prabhas Mega Budget Saaho

Comali Release Date Announced Clashes With Prabhas Mega Budget Saaho