NGK படத்திற்கு பிறகு சாய் பல்லவி நடிக்கும் படம் இதுதான் ! மேலும் படிக்க...
By Sakthi Priyan | Galatta | June 07, 2019 15:00 PM IST

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK படத்தில், சூர்யாவின் நடிப்பு எந்த அளவிற்கு பாராட்டப்பட்டதோ அதே அளவிற்கு நடிகை சாய் பல்லவியின் நடிப்பையும் கொண்டாடினர் ரசிகர்கள்.
நடனம் நடிப்பு என அசத்தி வரும் சாய் பல்லவி, அடுத்ததாக இயக்குனர் விஜய் இயக்கும் ஜெயலலிதா பயோபிக்கான தலைவி படத்தில் சசிகலா ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற வதந்தி வெளியானது.
இதுகுறித்து சாய் பல்லவி தரப்பினரிடம் கேட்ட போது, இச்செய்தி முற்றிலும் தவறானது என்று தெளிவு படுத்தினர். தற்போது சாய் பல்லவி ரானா டகுபட்டி படத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கவுள்ளதாம்.
இயக்குனர் வேணு உடுகளா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகைகள் தபு மற்றும் பிரியாமணி நடிக்கின்றனர். இந்த படம் குறித்த ருசிகர அப்டேட்டுகளுடன் உங்கள் பார்வைக்கு வருகிறோம்.