விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார் என்ற பேச்சு போய் கொண்டிருந்தது. இதற்கிடையே சில காரணங்களால் நடிகர் மாதவனே இப்படத்தை முழுவதும் இயக்கி வருகிறார். 

தற்போது இப்படத்தின் நம்பி நாராயணன் கொண்ட கெட்டப் புகைப்படத்தை வெளியிட்டார். அச்சு அசலாக நம்பி நாராயணனாகவே மாறியிருக்கிறார் நடிகர் மாதவன். சாக்லேட் பாய் கேரக்டர் மட்டுமல்லாமல் தனது நடிப்பின் அளவை பட்டைதீட்டும் நடிகர் மாதவனின் இம்முயற்ச்சி பாராட்டிக்குரியதாகும்.

Chocolate Boy Maddy Came With The Transformation From The Sets Of Rocketry As Nambi

இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் தயாராகும் இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.