சாமி 2 படத்திற்க்கு பிறகு விக்ரம் அடுத்ததாக தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

Chiyaan Vikram Wishes Universal Hero Kamal Haasan From The Sets Of Chiyan 56

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடாரம் கொண்டான் என்ற தலைப்பு வைத்துள்ள இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் தீபாவளி நாளான நேற்று வெளியானது. 

சியான் விக்ரமின் மாறுபட்ட தோற்றம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தற்போது கடாரம் கொண்டான் படக்குழுவினருடன் சேர்ந்து கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் உலக நாயகன் கமல் ஹாசன் சிறப்பு தோற்றத்தில் வருவாரா என்ற கேள்வி நிறைந்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.