சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் அதிரடி காம்போவின் துருவ நட்சத்திரம் பட புது சர்ப்ரைஸ்... அசத்தலான GLIMPSE இதோ!

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட 2வது பாடல் ப்ரோமோ வெளியீடு,chiyaan vikram in dhruva natchathiram 2nd single promo out now | Galatta

நீண்ட காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் சீயான் விக்ரம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக ஹிஸ் நேம் இஸ் ஜான் என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது. படத்திற்கு படம் வித்தியாசமான கதை கலங்களையும் நல்ல நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் ஆகச்சிறந்த நடிகராக சிம்மாசன்மிட்டு அமர்ந்திருக்கும் நடிகர் சீயான் விக்ரம் கடைசியாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் மக்களின் மனதை வென்றார். 

தொடர்ந்து அடுத்தடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் உருவாக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நிறைவடைந்த தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 1800-களின் காலகட்டத்தில் கே ஜி எஃப் கதைக்களத்தை மையப்படுத்திய அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த தங்கலான் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது. மேலும் இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் கொண்டு செல்லப் படக்குழுவினர் முடிவெடுத்து இருக்கின்றனர்.

முன்னதாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இத்திரைப்படத்தின் முதல் அறிவிப்பு ப்ரோமோ வெளிவந்த சமயத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பின. கிட்டத்தட்ட கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு காரணங்களால் இடையே தடைபட்டு நின்று கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இடையிடையே துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் சிறு டீசர் வீடியோவும் போஸ்டர்களும் முதல் பாடலும் வெளிவந்து ரசிகர்களை அவ்வபோது உற்சாகப்படுத்தின. ஆறு ஆண்டுகளாக இப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் வருகிற ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ தற்போது வெளியானது. “ஹிஸ் நேம் இஸ் ஜான்” என்ற துருவ நட்சத்திரம் படத்தின் அதிரடியான அந்த பாடல் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் ACTION PACKED துருவ நட்சத்திரம்... ஆவலோடு எதிர்பார்த்த 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் ACTION PACKED துருவ நட்சத்திரம்... ஆவலோடு எதிர்பார்த்த 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

'ஹேய் இங்க நான் தான் கிங்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பக்கா மாஸான ஹுக்கும் பாடல் முன்னோட்டம்! அதிரடி வீடியோ இதோ
சினிமா

'ஹேய் இங்க நான் தான் கிங்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பக்கா மாஸான ஹுக்கும் பாடல் முன்னோட்டம்! அதிரடி வீடியோ இதோ

பிக்பாஸ் போட்டியாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வைரலாகும் புகைப்படம்
சினிமா

பிக்பாஸ் போட்டியாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வைரலாகும் புகைப்படம்