விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற முகின்ராவ் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.முன்னதாக தமிழில் சுயாதீன இசைக்கலைஞராக பல பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் இறுதியில் இயக்குனர் கவின் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்த வேலன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் மதில் மேல் காதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஜீவி பிரகாஷ் இந்த படத்தின் கதாநாயகி திவ்யபாரதி நடிக்கிறார்.

இதனிடையே முகன் ராவின் புதிய மியூசிக் வீடியோ அடுத்து வெளிவரவுள்ளது. முகன் மற்றும் நடிகை ஆத்மிகா இணைந்து நடித்துள்ள மயக்குறியே மியூசிக் வீடியோவை ஜிம்மிருத் இயக்கியுள்ளார். அப்சர் நடன இயக்கம் செய்துள்ள மயக்குறியே பாடலுக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய கமலக்கண்ணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் அணிவீ எழுதி இசை அமைத்துள்ள இந்த மயக்குறகயே பாடலை ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் மயக்குரியே பாடலின் கலக்கலான ப்ரோமோ தற்போது வெளியானது.  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் அந்த ப்ரோமோ இதோ…