ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் சியான் 56. இப்படத்தை இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா அவர்கள் இயக்கி வருகிறார். 

Chiyaan 56 Movie Poster To Be Released By Tomorrow On Diwali Day

கடந்த 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தூங்காவனம் என்ற படத்தை இயக்கியவர் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

தீபாவளி நாளான நாளை முதல் லுக் வரும் செய்தி சினிமா ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தகவல் குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்.