ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் அவர்களது நடிப்பில் உருவாகிவரும் படம் சியான் 53. இப்படத்தை இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா அவர்கள் இயக்கிவருகிறார். 

Chiyaan 53 Recent Update Tweeted By Director Rajesh M Selva Who Gave Thoongavanam Starred By Kamal Haasan

கடந்த 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தூங்காவனம் என்ற படத்தை இயக்கியவர் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

Chiyaan 53 Recent Update Tweeted By Director Rajesh M Selva Who Gave Thoongavanam Starred By Kamal Haasan

கமல்ஹாசன் அவர்களுடன் வெகுநாட்களாக துணை இயக்குனராக பயணித்த ராஜேஷ்.எம்.செல்வா அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பதிவில் இருந்து வெளியிட்டார். மேலும் விக்ரம் போன்ற கலைஞனை அனைவரும் விரும்புவர் என குறிப்பிட்டிருக்கிறார்.