கேப்டன் விஜயகாந்த்: 'இன்னும் சில நாட்கள் கண்காணிப்பு'- தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பு வெளியிட்ட அறிக்கை இதோ!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பு வெளியிட்ட அறிக்கை,captain vijayakanth current health report from miot hospital chennai | Galatta

கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் பரவி வந்த நிலையில், விஜயகாந்த் அவர்களின் தரப்பில் இருந்து போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

“திரு.விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”  என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த சில தினங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். மருத்துவமனை வெளியிட்ட விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இதோ... 

 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!#Vijayakanth #DMDK #CaptainVijayakanth #GalattaNews pic.twitter.com/LNOTtesC8I

— Galatta Media (@galattadotcom) November 23, 2023

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சனிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்தன. திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுவாச பிரச்சனை இருப்பதால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனால் தேமுதிக கட்சியின் தொண்டர்கள், அவரது ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் முடிந்து வருத்தத்திற்கு உள்ளாகினர். செய்திகள் வெளியான கொஞ்ச நேரத்திற்கு விஜயகாந்த் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையோ தகவல்களோ எதுவும் வெளிவராமல் சூழ்நிலையில் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்து மிகவும் மோசமான செய்திகள் வெளிவந்தது இன்னும் பதற்றத்தை கிளப்பியது  

இதை அடுத்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டு சர்ச்சைகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அந்த அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டது.